தங்கம் விலை பவுனுக்கு ரூ.440 குறைந்தது: நகை வாங்குவோருக்கு ஆறுதல்

சென்னை: தங்கம் விலை மளமளவென உயருதே என கவலைப்பட்ட அனைவருக்கும் இந்த வியாழன் அதிரடி வியாழனாக மாறியுள்ளது. கடந்த 8 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.440 குறைந்து நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வந்த தங்கம் விலை, நேற்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, நேற்று தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.440 குறைந்து ரூ.58,280க்கும், ஒரு கிராம் ரூ.55 குறைந்து ரூ.7,285க்கும் விற்பனையாகி வருகிறது. பவுன் ரூ.59,000ஐ நெருங்கிய நிலையில், நேற்று அதிரடியாக விலை குறைந்தது நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு சற்று ஆறுதலை தந்துள்ளது.

The post தங்கம் விலை பவுனுக்கு ரூ.440 குறைந்தது: நகை வாங்குவோருக்கு ஆறுதல் appeared first on Dinakaran.

Related Stories: