வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை..!!

சென்னை: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தினார். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் போன்றவற்றுக்கான பணிகள் வரும் அக்.29ம் தேதி தொடங்குகிறது. அன்று காலை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இப்பட்டியல் அடிப்படையில், திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. வரும் நவ.28ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்வதற்கு விண்ணப்பிக்கலாம்.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறுவதையொட்டி தலைமைச் செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி கட்சி, பி.ஏ. சங்மாவின் தேசிய மக்கள் கட்சி ஆகியவை மற்றும் மாநில கட்சிகளான திமுக, அதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஓவ்வொரு கட்சியின் சார்பிலும் 2 பிரதிநிதிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் நடைமுறைகள், சிறப்பு முகாம் ஏற்பாடுகள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

The post வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Related Stories: