உலக வங்கி மற்றும் சர்வதேச வருடாந்திர கூட்டங்கள் 2024-ஐ ஒட்டி வாஷிங்டனில், உலகளாவிய வளர்ச்சிக்கான மையம் ஏற்பாடு செய்யபட்டது. இதில் அடுத்த தசாப்தத்திற்கான முன்னுரிமைகள்’ என்ற குழு விவாதத்தில் பங்கேற்ற போது தொலைவில் இருக்கும் அமெரிக்காவோ அல்லது மிக அருகில் இருக்கும் சீனாவோ இந்தியாவை புறக்கணிக்க முடியாது என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன்:
இந்தியாவின் முன்னுரிமை அதன் மேலாதிக்கத்தை திணிப்பதல்ல, அதாவது உலகில் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்டுள்ளோம் இப்போது நாம் ஏன் நமது செல்வாக்கை அதிகரிக்க விரும்புகிறோம், ஏனென்றால் இன்று உலகில் உள்ள ஒவ்வொரு ஆறில் ஒருவர் இந்தியராக இருப்பதால், நமது பொருளாதாரத்தையும் அது வளரும் விதத்தையும் நீங்கள் புறக்கணிக்க முடியாது. இந்தியா தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ளது.
டெக்னாலஜி, லெவரேஜிங் டெக்னாலஜி என்று எங்கு பார்த்தாலும் இந்தியர்களை பார்க்க முடிகிறது. சுத்திகரிப்பு அமைப்பு, எண்ணெய் சுத்திகரிப்பு அமைப்பு என சிக்கலான கார்ப்பரேட் நிறுவனத்தை இயக்கக்கூடிய அமைப்புகளிலும் இந்தியர்கள் உள்ளனர். பலதரப்பு வங்கி அமைப்பாக இருந்தாலும் சரி, நாம் வாழும் புவிசார் அரசியல் சூழலிலும் எங்களை புறக்கணிக்க முடியாது. இந்தியா எப்போதுமே பலதரப்பு நிறுவனங்களை ஆதரிக்கிறது. நாங்கள் எந்தவொரு பலதரப்பு நிறுவனத்தையும் குறைத்து மதிப்பிட எந்த நேரத்திலும் முயற்சிக்கவில்லை என்று அவர் கூறினார்.
The post அமெரிக்காவாக இருந்தாலும் சரி, சீனாவாக இருந்தாலும் சரி இந்தியாவை புறக்கணிக்க முடியாது: நிர்மலா சீதாராமன் உரை appeared first on Dinakaran.