குன்னூர், டிச.30: குன்னூரில் புதர் மண்டிக்கிடக்கும் ஓடைகளை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ள நிலையில் அனைத்து வார்டு மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களும், அடிப்படை வசதிகளும் படிப்படியாக பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நகராட்சிக்கு சொந்தமான 25 வது வார்டு கவுன்சிலர் ஜாகீர் உசேன் முயற்சியில் ரெய்லி காம்பவுண்ட் பகுதியில் இருந்து குன்னூர் நகர பகுதி வரையுள்ள நடைபாதைகள் மற்றும் ஓடைகளை சீரமைக்கப்பட்டு வருகிறது.
இதில், 10-க்கும் மேற்பட்ட நகராட்சி தூய்மை பணியாளர்களுடன் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அங்குள்ள ஓடைகளில் செடி, கொடிகள் படர்ந்துள்ளதால், மழை காலங்களில் தண்ணீர் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது. மேலும் ஓடைகளில் வீசப்படும் குப்பைகளாலும் தண்ணீர் செல்லவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் ஓடைகளில் புதர் மண்டிய செடி கொடிகளை அகற்றும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
The post குன்னூரில் புதர் மண்டிக்கிடக்கும் ஓடைகள் சீரமைப்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.