ஊட்டி, டிச. 31: அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் 3 பயனாளிகளுக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் ஆணைகளை வழங்கினர். ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் தலைமை வகித்தார். கூட்டத்தில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ், 3 பயனாளிகளுக்கு கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட பிரகாசபுரம் பகுதியில் வீடு ஒதுக்கீடு செய்து, அதற்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.
மேலும், ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 101 கோரிக்கை மனுக்களை பெறப்பட்டது. இக்கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சத்திய நாராயணன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கல்பனா, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
The post அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு appeared first on Dinakaran.