எஸ்சி, எஸ்டி, ஓபிசிக்களின் இட ஒதுக்கீடு பட்டியலை பராமரிக்க வேண்டும்: மண்டலங்களுக்கு ரயில்வே வாரியம் அறிவுறுத்தல்

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள 17 ரயில்வே மண்டலங்களின் பொது மேலாளர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் தலைவர்களுக்கு அக்டோபர் 18ம் தேதியிட்ட எழுத்துப்பூர்வ கடிதத்தில் ரயில்வே வாரியத்தின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சதீஷ்குமார் கூறியிருப்பதாவது: அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் தற்போதுள்ள இடஒதுக்கீடு கொள்கைகளை முறையாக செயல்படுத்துவதையும், ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு பட்டியல்களை பராமரிப்பதையும் கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும். எஸ்சி, எஸ்டி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் கவலைகளைத் தீர்க்க அனைத்து மண்டலங்களும் 7 நிலைகளை பின்பற்ற வேண்டும்.

தற்போதைய இடஒதுக்கீடு கொள்கைகளை முறையாகச் செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக அவ்வப்போது வழங்கப்படும் ரயில்வே வாரியத்தின் வகுக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி இடஒதுக்கீடு பட்டியல் பதிவுகள் பராமரிக்கப்பட வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி போன்றோருக்கு ஒதுக்கப்பட்ட பதவிகள் அவர்களை கொண்டு மட்டுமே நிரப்பப்பட வேண்டும். இடஒதுக்கீட்டுப் பட்டியல்கள் மாதத்திற்கு இரண்டு முறையாவது, எஸ்சி, எஸ்டிக்களுக்கான பரிந்துரைக்கப்பட்ட தொடர்பு அதிகாரிகளாலும், அனைத்து மட்டங்களிலும் ஓபிசிக்கான தொடர்பு அதிகாரிகளாலும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

The post எஸ்சி, எஸ்டி, ஓபிசிக்களின் இட ஒதுக்கீடு பட்டியலை பராமரிக்க வேண்டும்: மண்டலங்களுக்கு ரயில்வே வாரியம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: