நாடாளுமன்ற குழு நடவடிக்கைகளை வெளியிடவில்லை: ஜேபிசி தலைவர் விளக்கம்

புதுடெல்லி: நாடாளுமன்ற குழு நடவடிக்கைகளை வெளியிடவில்லை என்றும் கூட்டத்தில் நடந்த வன்முறையை தான் தெரிவித்தேன் என்று நாடாளுமன்ற கூட்டு குழு(ஜேபிசி) தலைவர் ஜெகதாம்பிகா பால் தெரிவித்தார். வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தொடர்பான ஜேபிசி குழு கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில், மேற்கு வங்கத்தை சேர்ந்த பாஜ எம்பி அபிஜித் கங்கோபாத்யாய் என்பவரும், திரிணாமுல் எம்பி கல்யாண் பானர்ஜியும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசினர். இதில் ஆத்திரமடைந்த பானர்ஜி திடீரென கண்ணாடி பாட்டிலை உடைத்தார்.

நாடாளுமன்ற குழு கூட்டத்தில் நடந்த சம்பவத்தை வெளிப்படையாக அறிவித்ததன் மூலம் ஜெகதாம்பிகா பால் விதிமுறைகளை மீறி விட்டார் என திமுக எம்பி ஆ.ராசா குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ஜெகதாம்பிகா பால்,நாடாளுமன்ற குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்களை நான் எதுவும் வெளியிடவில்லை. ஜேபிசி குழுவின் தலைவர் என்ற முறையில் கூட்டத்தில் நடந்த வன்முறையையும் அதில் சம்மந்தப்பட்ட நபர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதையும் தான் கூறினேன்.நாடாளுமன்ற விதிமுறைகளை கடைப்பிடித்து சபையின் கண்ணியத்தை எப்பொழுதும் நிலை நிறுத்தி வந்துள்ளேன் என்று தெரிவித்தார்.

The post நாடாளுமன்ற குழு நடவடிக்கைகளை வெளியிடவில்லை: ஜேபிசி தலைவர் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: