சென்னை: தீபாவளியை ஒட்டி சென்னை தியாகராயர் நகர் ரங்கநாதன் தெரு, சுற்றியுள்ள இடங்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரங்கநாதன் தெரு மற்றும் சுற்றியுள்ள இடங்களில் 64 கேமராக்கள், 7 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. குற்றங்களை தடுக்க கண்காணிப்பை ஒருங்கிணைக்கும் வகையில் மாம்பலம் காவல் நிலையத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.