திண்டுக்கல்லில் மகளிர் உரிமை துறை கருத்தரங்கு

திண்டுக்கல், அக். 19: திண்டுக்கல்லில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் சார்பில் ஒரு நாள் கருத்தரங்கு எம்.வி.எம். அரசு பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது. மாவட்ட சமூக நல அலுவலர் புஷ்பகலா, இன்ஸ்பெக்டர் அமுதா, சிறப்பு எஸ்ஐ மகாலட்சுமி முன்னிலை வகித்தனர்.

ஏ.டி.எஸ்.பி. தெய்வம் தலைமை வகித்து குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை எவ்வாறு கையாள வேண்டும். போக்சோ சட்டத்தை குறித்து அறிந்து கொள்ள வேண்டும். பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு, குழந்தைகள் கடத்தல் போன்றவற்றில் நாம் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என பேசினார். இதில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

The post திண்டுக்கல்லில் மகளிர் உரிமை துறை கருத்தரங்கு appeared first on Dinakaran.

Related Stories: