ஜார்க்கண்ட் முதல் கட்ட தேர்தல் 43 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 43 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு 25ம் தேதி கடைசி நாளாகும். 28ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். 30ம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு கடைசி நாளாகும்.

68 தொகுதிகளில் பாஜ போட்டி: அசாம் முதல்வரும், ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் பாஜ பொறுப்பாளருமான ஹிமந்த பிஸ்வா சர்மா கூறுகையில்,‘‘சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு ஏறத்தாழ இறுதி செய்யப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஏஜேஎஸ்யூ கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. ஐக்கிய ஜனதா தளம் 2 தொகுதியிலும், எல்ஜேபி 1 தொகுதியிலும் போட்டியிடுகின்றது. தற்போதைய நிலவரப்படி பாஜ 68 தொகுதிகளில் போட்டியிடும்” என்றார்.

The post ஜார்க்கண்ட் முதல் கட்ட தேர்தல் 43 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: