புழல் அருகே நகர் பகுதிகளில் தேங்கும் ரெட்டேரி உபரிநீர்: கால்வாய் அமைக்க வலியுறுத்தல்


புழல்: சென்னை புழல் அருகே உள்ள மாதவரம் ரெட்டேரியின் முழு கொள்ளளவு 32 மில்லியன் கனஅடி. கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால், ரெட்டேரி முழு கொள்ளளவை எட்டி, நிரம்பி வழிகிறது. இதனால் புழல் அருகே எம்.ஜி.ஆர் நகர் வழியாக ரெட்டேரி மதகு வழியாக விநாடிக்கு 400 கனஅடி உபரிநீர் திறந்து விடப்படுகிறது. இந்த உபரிநீர், அருகில் உள்ள அறிஞர் அண்ணா நகர், ராகவேந்திரா அவென்யூ, மாதவரம்-செங்குன்றம் நெடுஞ்சாலை, புழல் அருகே வடபெரும்பாக்கம் வழியே புழலேரியில் கலந்து வருகிறது. எனினும், மேற்கண்ட நகர் பகுதி மற்றும் மாநில நெடுஞ்சாலையில் புதிதாக மழைநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. ரெட்டேரியில் இருந்து மதகுகள் வழியாக திறந்துவிடப்படும் உபரிநீர் மேற்கண்ட நகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் போல் புகுந்துள்ளது.

இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இப்பகுதிகளில் உபரிநீர் முறையாக வெளியேற மதகுகளோ, மழைநீர் கால்வாய்களோ அமைக்கப்படவில்லை. எனவே, மேற்கண்ட நகர் பகுதிகள் வழியாக புழலேரிக்கு ரெட்டேரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் முறையாக செல்வதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் நீர்வளத்துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, அங்கு புதிதாக மழைநீர் கால்வாய் மற்றும் மதகுகள் அமைத்துதர வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post புழல் அருகே நகர் பகுதிகளில் தேங்கும் ரெட்டேரி உபரிநீர்: கால்வாய் அமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: