ஆடி வெள்ளி திருவிழாவில் ₹13.51 லட்சம் உண்டியல் காணிக்கை 51 கிராம் தங்கம், 490 கிராம் வெள்ளியும் கிடைத்தது வெட்டுவாணம் எல்லையம்மன் கோயில்

பள்ளிகொண்டா, அக்.17: பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம் எல்லையம்மன் கோயிலில் ஆடி வெள்ளி திருவிழாவில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள் ₹13.51 லட்சத்தை உண்டியல் காணிக்கையாகவும், 51 கிராம் தங்கம், 490 கிராம் வெள்ளியை நேர்த்திக்கடனாகவும் செலுத்தியுள்ளனர். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம் எல்லையம்மன் கோயிலில் கடந்த ஜூலை மாதம் 19ம் தேதி ஆடி முதல் வெள்ளி திருவிழா தொடங்கி நடைபெற்று முடிந்தது.
இதில், வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் அனைத்து வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்தனர். அதன்படி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றி கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலில் காணிக்கையை செலுத்தினர். இதனையடுத்து உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் வளாகத்தில் அறநிலையத்துறை உதவி ஆணையர்/ தக்கர் ஜீவானந்தம் தலைமையில், கோயில் செயல் அலுவலர், நடராஜன் முன்னிலையில் நேற்று நடந்தது. இதில் பக்தர்கள் ₹13 லட்சத்து 50 ஆயிரத்து 947 ரூபாய் ரொக்கத்தை செலுத்தியிருந்தனர். மேலும், 51 கிராம் தங்கமும், 490 கிராம் வெள்ளியையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஆய்வர் சுரேஷ் குமார், கணக்காளர் சரவணபாபு, திருக்கோயில் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

The post ஆடி வெள்ளி திருவிழாவில் ₹13.51 லட்சம் உண்டியல் காணிக்கை 51 கிராம் தங்கம், 490 கிராம் வெள்ளியும் கிடைத்தது வெட்டுவாணம் எல்லையம்மன் கோயில் appeared first on Dinakaran.

Related Stories: