ஆந்திராவுக்கு ஈச்ச மரங்கள் கடத்தல் அதிகாரிகள் நடவடிக்கைக்கு கோரிக்கை பொன்னை அருகே அரசு நிலங்களில் இருந்து

பொன்னை, அக். 15: பொன்னை அருகே அரசு நிலங்களில் உள்ள ஈச்ச மரங்களை வேரோடு பிடுங்கி, ஆந்திரா உட்பட வெளிமாநிலங்களுக்கு கடத்தி செல்லும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பொன்னை சுற்றுப்புற பகுதிகளில் அரசு புறம்போக்கு இடங்களில் உள்ள ஈச்ச மரங்களை மர்மநபர்கள் கடந்த சில நாட்களாக வேரோடு திருடி வருவதாக கூறப்படுகிறது. மேலும், அரசு நிலங்களில் உள்ள ஈச்ச மரங்களை மர்ம நபர்கள் வேரோடு தோண்டி எடுத்து ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் கடத்தி கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது. இதனால் இயற்கை பேரழிவு ஏற்படுவதுடன் இப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் முற்றிலும் காய்ந்து விடுவதாகவும், இதனால் வெயில் காலங்களில் அதிக வெப்பம் உணரப்படுவதாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே அரசு நிலங்களில் உள்ள ஈச்ச மரங்கள் வேரோடு பிடுங்கி கடத்தி கொண்டு செல்லும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இயற்கை வளங்கள் மற்றும் நீர் நிலைகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஆந்திராவுக்கு ஈச்ச மரங்கள் கடத்தல் அதிகாரிகள் நடவடிக்கைக்கு கோரிக்கை பொன்னை அருகே அரசு நிலங்களில் இருந்து appeared first on Dinakaran.

Related Stories: