வேலூர், அக். 11–: ஓட்டலில் சேவை குறைபாட்டால் வாடிக்கையாளருக்கு ₹25 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலூர் ஊனைவாணியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ் குமார். இவர் வேலூர் அருகே ஒரு ஓட்டலில் கடந்த பிப்ரவரி மாதம் நண்பர்களுடன் சாப்பிடச் சென்றுள்ளார். அங்கு அவர்கள் ஆர்டர் செய்த உணவை வழங்க தாமதப்படுத்தியது மட்டுமல்லாமல், சாப்பிடாததற்கும் சேர்த்து பில் வழங்கி உள்ளனர். இந்த சேவை குறைபாடு தொடர்பாக ராகேஷ்குமார் வேலூர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நுகர்வோர் கோர்ட் தலைவர் மீனாட்சி சுந்தரம், உறுப்பினர்கள் அஸ்கர்கான், அஸீனா ஆகியோர் விசாரித்தனர். அதில், ஓட்டல் தரப்பில் மனுதாரருக்கு சேவை வழங்கியதில் குறைபாடு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மனுதாரருக்கு இழப்பீடாக ₹25 ஆயிரத்தை ஒரு மாதத்திற்குள் வழங்க உத்தரவிட்டனர்.
The post ஓட்டலில் சேவை குறைபாட்டில் வாடிக்கையாளருக்கு ₹25 ஆயிரம் இழப்பீடு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.