காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை முன்னெச்சரிக்கை பணிகளை அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு

காஞ்சிபுரம்: சென்னை வானிலை ஆய்வு மையம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக கனமழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று காஞ்சிபுரம் வந்தார். அங்குள்ள, சுற்றுலா ஆய்வு மாளிகையில் கலெக்டர் கலைச்செல்வி மோகன், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் மற்றும் அனைத்துத்துறை அதிகாரியுடன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, மழை முன்னேற்பாடு பணிகள் குறித்தும், மழை பாதிப்புகள் ஏற்பட்டால் என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.பின்னர், அமைச்சர் ஆர்.காந்தி நிருபர்களிடம் கூறுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக என்னை நியமித்துள்ளார். முதல்வரின் உத்தரவின்பேரில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை முன்னேற்பாடுகள் பணிகள் மற்றும் பாதிப்பு ஏற்படும் இடங்கள் குறித்து அதிகாரியுடன் கேட்டறிந்தேன். அதிக மழை பாதிப்பு ஏற்படும் இடங்களில் கூடுதல் கவனமும் செலுத்த வேண்டும் என்று அதிகாரியிடம் கேட்டுக்கொண்டேன். காஞ்சிபுரம் தொகுதி எம்பி, எம்எல்ஏக்களிடம் கருத்துக்களையும் கேட்டறிந்தேன்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை பாதிப்புகள் ஏற்படாத வகையில், அனைத்து விதமான ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என்றார். ஆய்வின்போது காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தர், ஏழிலரசன், மேயர் மகாலட்சுமி யுவராஜ், ஒன்றியக்குழு தலைவர் மலர்கொடி குமார், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் நித்யா சுகுமார், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், குமணன், படுநெல்லி பாபு, ஞானசேகரன், சேகர், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமார், பகுதிச் செயலாளர்கள் சந்துரு, திலகர், தசரதன், வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், செவிலிமேடு மோகன், ஒன்றிய கவுன்சிலர் ராம் பிரசாத், கைத்தறித்துறை நிர்வாகி மலர்மன்னன், மாநகர நிர்வாகிகள் முத்துச்செல்வம், சுப்பராயன், ஜெகன்நாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை முன்னெச்சரிக்கை பணிகளை அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: