வடகிழக்கு பருவமழை எச்சரிக்கை.. சென்னை மாநகராட்சி சார்பில் பாதிப்பு தொடர்பாக புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிப்பு..!!

சென்னை: சென்னையில் வடகிழக்கு பருவமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு உதவும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் பாதிப்பு தொடர்பாக புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் மழை பாதிப்பு தொடர்பாக புகார் அளிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 1913, 044-2561 9207, 044-2561 9204, 044-2561 9206 ஐ தொடர்பு கொண்டு மழை பாதிப்பு பற்றி புகார் அளிக்கலாம். 89911 24176, 89911 24175 ஆகிய எண்களில் மழை பாதிப்பு தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தாம்பரம்: அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு
தாம்பரம் மாநகராட்சியில் மழை பாதிப்பு தொடர்பான புகார் அளிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 18004254355, 18004251600 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்புக் கொண்டு மழை பாதிப்பு புகார் அளிக்கலாம். மற்றும் புகார்களை 8438353355 என்ற வாட்ஸ் ஆப் எண் மூலமும் தெரிவிக்கலாம். மீட்புப் பணிகளை மேற்கொள்ள பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளப்பாதிப்பு பணிகளை கண்காணிக்க மண்டலங்களில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு: அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை தொடர்பான புகார்கள் அளிக்க 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 1077, 044-27427412, 044-27427414 தொலைபேசி மற்றும் 9944272345 என்ற வாட்ஸ்அப் வழியே தொடர்பு கொண்டு மழை பாதிப்பு பற்றி புகார் அளிக்கலாம்.

 

The post வடகிழக்கு பருவமழை எச்சரிக்கை.. சென்னை மாநகராட்சி சார்பில் பாதிப்பு தொடர்பாக புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories:

சென்னை: பெண் கல்வி ஊக்குவிப்பதாக கூறும் பிரதமர் மோடியின் ஒன்றிய அரசு கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடிப்பதாக திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். குடும்பத்தில் ஒற்றை பெண் பிள்ளையாக இருப்பவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் சாவித்ரிபாய் ஜோதிராவ் புலே பெயரில் ஆராய்ச்சி குறிப்புக்கான கல்வி உதவித்தொகை திட்டம் ஒன்றிய அரசால் தொடங்கப்பட்டது. முதல் 2 ஆண்டுகளுக்கு மாதம் தோறும் ரூ.37 ஆயிரம், அடுத்த 3 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.42 ஆயிரம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் இத்திட்டத்தில் யூஜிசி ஆல் பல மாதங்களாக கல்வி உதவித்தொகை வழங்கப்படாமல் இருப்பதாக அதிருப்தி தெரிவித்துள்ளார். இதனால் அன்றாட தேவைகளை சமாளிக்க முடியாத நிலையில் ஆராய்ச்சி படிப்பு மாணவிகள் உள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். 2022 ஆம் ஆண்டு இத்திட்டத்தின் பயனாளிகளாக இணைக்கப்பட்ட 1029 மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறாமல் கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிச்சயமற்ற தன்மை கல்வி முன்னேற்றத்தை பாதித்து உயர்கல்வியில் பெண்களை மேம்படுத்துவதற்கான ஆதரவையும் குறைப்பதாக வேதனை தெரிவித்துள்ளார். பெண் பிள்ளைகளை பாதுகாத்து, கல்வி வழங்குவோம் என்பது வெறும் தேர்தல் முழக்கமாக மட்டும் இருக்க கூடாது எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார். நிலுவையில் உள்ள கல்வி உதவித்தொகையை விடுவிப்பதோடு புதிய விண்ணப்பங்களை பெற யு.ஜி.சிக்கு உத்தரவிடுமாறு ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு வலியுறுத்தியுள்ளார்.