2வது நாளாக 150 டன் குப்பைகள் அகற்றம்

 

தர்மபுரி, அக்.14: தர்மபுரி நகராட்சி பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை, சுமார் 150 டன் குப்பை கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டது.
தர்மபுரி நகராட்சி 33 வார்டுகளில் மொத்தம் 342 தெருக்கள் உள்ளன. இங்கு, வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் நிறைந்துள்ளன. ஆயுத பூஜை மற்றும் விஜய தசமியையொட்டி அனைத்து இடங்களிலும் சாதி-மத வேறுபாடினின்றி மாவிலை தோரணம், வாழை மரம் கட்டி, பூசணி உடைத்து பூஜை போட்டு வழிபட்டனர். பண்டிகை முடிந்ததும் பூஜைக்காக பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அனைத்தும் வீதிக்கு வந்தது. நேற்று முன்தினம் நகராட்சி துப்புரவு ஊழியர்கள் 155 டன் குப்பை கழிவுகளை அகற்றினர். நேற்று 2வது நாளாக வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து திடக்கழிவுகள், வாழை மரங்கள், பூசணிக்காய்கள் என 150 டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டது. இப்பணியானது காலை 5 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடந்தது. குப்பைகளை அகற்றும் பணியை நகராட்சி கமிஷனர் சேகர், நகர் நல அலுவலர் ராஜரத்தினம் ஆகியோர் பார்வையிட்டனர். குப்பைகளை அகற்றும் பணியில் துப்புரவு ஆய்வாளர்கள் ரமணசரண், சுசீந்திரன் மேற்பார்வையில் துப்புரவு ஊழியர்கள் ஈடுபட்டனர்.

The post 2வது நாளாக 150 டன் குப்பைகள் அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: