கவாச் தொழில்நுட்பத்துக்கும் விபத்துக்கும் சம்பந்தம் இல்லை: ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சவுத்ரி தகவல்

சென்னை: கவாச் தொழில்நுட்பத்திகும், விபத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சௌத்ரி தெரிவித்துள்ளார். பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளான இடங்களை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சவுத்ரி நேரில் ஆய்வு செய்தார். மறுசீரமைப்பு முழு வீச்சில் வேலை நடைபெற்று வரும் நிலையில் மூத்த அதிகாரிகளின் உதவியுடன் சட்டப்பூர்வ ஆய்வை அவர் நடத்தினார். தடங்கள், சிக்னல்கள், ஸ்டேஷன் எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் சிஸ்டம்ஸ், கண்ட்ரோல் பேனல்கள் மற்றும் பிற குறிப்பிடத்தக்க பாதுகாப்பு, சிக்னல் மற்றும் செயல்பாட்டு அம்சங்கள் ஆகியவற்றை முழுமையாக ஆய்வு செய்தார்.

மேலும் காயமடைந்து ஸ்டான்லி மற்றும் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பயணிகளுக்கு, ரயில்வே விதிமுறைப்படி கருணைத் தொகை வழங்கப்பட்டது. பின்னர் தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சௌத்ரி செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த விபத்து மனித தவறா அல்லது தொழில்நுட்ப பிரச்னையா என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறோம். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கவாச் தொழில்நுட்பத்திற்கும், இந்த விபத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்தார்.

The post கவாச் தொழில்நுட்பத்துக்கும் விபத்துக்கும் சம்பந்தம் இல்லை: ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சவுத்ரி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: