கவரைப்பேட்டையில் நிகழ்ந்த ரயில் விபத்து: 13 ரயில்வே ஊழியர்களுக்கு சம்மன்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் நிகழ்ந்த ரயில் விபத்து தொடர்பாக 13 ரயில்வே ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே அலுவலகத்தில் இன்று மாலை 13 பேரும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. கவரைப்பேட்டை ஸ்டேஷன் மாஸ்டர் முனிபிரசாத் பாபு, லோகோ பைலட் சுப்பிரமணியன், உதவி லோகோ பைலட், மோட்டார் மேன், கவரைப்பேட்டை கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரி மற்றும் கவரைப்பேட்டை சிக்னல் ஆபரேட்டர்கள் 2 பேரும் ஆஜராகுமாறு சென்னை கோட்ட மேலாளர் சம்மன் அனுப்பியுள்ளார்.

 

The post கவரைப்பேட்டையில் நிகழ்ந்த ரயில் விபத்து: 13 ரயில்வே ஊழியர்களுக்கு சம்மன் appeared first on Dinakaran.

Related Stories: