ஒசூர் கோட்டத்தில் ரூ.1 கோடியில் தூர்வாரும் பணிக்கு அரசாணை வெளியீடு..!!

சென்னை: ஒசூர் கோட்டத்தில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் கிடைக்க நீர்நிலைகளை தூர்வாரும் திட்டத்துக்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம், ராயக்கோட்டையில் 20 நீர்நிலைகள் தூர்வாரப்பட உள்ளன. வனவிலங்குகளுக்கு தண்ணீர் கிடைக்க ரூ.1 கோடியில் நீர்நிலைகளை தூர்வாரும் திட்டத்தை முதல்வர் அறிவித்திருந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் திட்டத்துக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

நீர்வளத்துறையின் செயல்பாடுகள், துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம், புதியதாகச் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் ஆகியவை குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளைப் புனரமைத்து, தூர்வாரி, நீரின் கொள்ளளவை அதிகப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்வதோடு, புதிய நீர்நிலைகளை உருவாக்கிடவும், மழைநீர் மூலம் கிடைக்கும் நீரை முழுமையாகச் சேமித்துப் பயன்படுத்த, அணைகள் இல்லாத மாவட்டங்களில் புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்களைக் குறிப்பாகத் தடுப்பணைகளை உருவாக்கிட வேண்டும்.

நீர்வள ஆதாரத்தை அதிகரிக்கும் வகையில், புதிய தடுப்பு அணைகள் மற்றும் புதிய நீர்நிலைகளை உருவாக்கிடவும், ஓசூர் கோட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளில் தூர்வாரி வனவிலங்குகளுக்கு தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

 

The post ஒசூர் கோட்டத்தில் ரூ.1 கோடியில் தூர்வாரும் பணிக்கு அரசாணை வெளியீடு..!! appeared first on Dinakaran.

Related Stories: