இந்நிலையில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, அரியக்குடி, தேவக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக காரைக்குடியில் நேற்று மாலை 2 மணி நேரம் பெய்த கனமழை 154 மிமீ ஆக பதிவானது. இதனால் காரைக்குடியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்தது.
காரைக்குடியில் நேற்று பெய்த கனமழையால் ரயில்வே ஸ்டேஷன் அருகே வாகனங்கள் செல்லும் சுரங்கப்பாதை முழுவதும் தண்ணீர் நிரம்பி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சுரங்கபாதையில் தண்ணீர் ஏதேனும் இருந்தால் யாரேனும் கடக்க வேண்டாம் என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி சுரங்கபாதையில் தண்ணீரை கடக்க முயன்றுள்ளார். அப்போது நீரில் மூழ்கி வெளியே வர முடியாமல் அந்த நபர் உயிரிழந்தார்.
இந்நிலையில் அப்பகுதிமக்கள் சுரங்கப் பாதை தண்ணீரில் இறந்த நிலையில் ஒருவரது உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். 2 மணி நேர மீட்பு பணிக்கு சடலம் கைப்பற்றப்பட்டது. நீரில் மூழ்கி உயிரிழந்தவர் அப்பகுதியை சேர்ந்த பீட்டர் என்பது தெரியவந்தது. ரயில்வே போலீசார் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post காரைக்குடியில் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் மூழ்கி ஒருவர் பலி!! appeared first on Dinakaran.