சென்னை: அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 1,614 புதிய டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. பழைய பேருந்துகளை கழித்து, புதிய பேருந்துகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. 2024-25ம் நிதியாண்டில் 3,000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய ரூ.1,535.89 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.