அவரது மறைவைத் தொடர்ந்து இப்போது நோயல் டாடா புதிய தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரத்தன் டாடாவின் தந்தை நேவல் ஹெச் டாடாவின் இரண்டாவது மனைவியின் மகன் தான் இந்த நோவல் டாடா. ரத்தன் டாடாவுக்கு பிறகு இவரே டாடா அறக்கட்டளையின் தலைவராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படியே நடந்துள்ளது. ரத்தன் டாடாவும் கூட இவருடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் ஏற்கனவே சர் டோராப்ஜி டாடா டிரஸ்ட் மற்றும் சர் ரத்தன் டாடா டிரஸ்ட் குழுவில் அறங்காவலராக உள்ளார். தற்போதுநோயல் டாடா, டைட்டன் மற்றும் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் துணைத் தலைவராக உள்ளார். மேலும், அவர் ஜூடியோ மற்றும் வெஸ்ட் சைட் ஆகிய நிறுவனங்களின் தாய் நிறுவனமான ட்ரெண்டின் தலைவராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post ரத்தன் டாடா மறைவிற்கு பிறகு டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக நோயல் டாடா ஒருமனதாகத் தேர்வு appeared first on Dinakaran.