சென்னை: சென்னை ECR பகுதியில் உள்ள தனியார் ரிசாட்டில் உள்ள நீச்சல் குளத்தில் தவறி விழுந்து 5 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. ரிசாட்டில் தோட்ட வேலை செய்து வரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணா – ஜமுனா தம்பதியினர் நேற்று தூங்கிக்கொண்டிருந்த போது, வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தவறி விழுந்து உயிரிழந்துள்ளது.