பாலக்காட்டில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் நூதன போராட்டம்

 

பாலக்காடு, அக். 11: பாலக்காடு டவுன் கிழக்கு மண்டல காங்கிரஸ் கமிட்டி சார்பில் பழுதடைந்த சாலைகள் சீரமைத்து நூதன போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போராட்டத்தை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கிதர் முகமது தொடங்கி வைத்து பேசுகையில், ‘‘பாலக்காடு நகராட்சியில் சாலைகள் அனைத்துமே மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. நகரத்தின் முக்கிய சாலை சந்திப்புகளில் குண்டும், குழியுமாக வாகன போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும், இருசக்கர வாகன ஓட்டுநர்கள் குண்டு, குழிகளில் சிக்கி விபத்துகள் அதிகளவில் ஏற்படுகிறது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. சாலைகள் சீரமைக்க வேண்டும், வாகன போக்குவரத்திற்கு உகந்த சாலைகள் அமைக்க வேண்டும்’’ என வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து, பாலக்காடு – கோழிக்கோடு பைபாஸ் சாலையில் பழுதடைந்த சாலை சந்திப்பை குண்டு, குழிகளை அடைத்து மாவட்ட காங்கிரஸ் தொண்டர்கள் நூதன போராட்டம் நேற்று நடத்தினர். இந்த போராட்டத்திற்கு மண்டல தலைவர் சேவியர் தலைமை வகித்தார். பிளாக் காங்கிரஸ் தலைவர் சதீஷ், உறுப்பினர்களான ஜவகர்ராஜ், சர்ராஜ், பிரசோத், பிரசாத், ஹரிதாஸ், ரஜீஷ்பாலன், சத்தார், செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.

 

The post பாலக்காட்டில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் நூதன போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: