மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நேற்று காலை நிலவரப்படி 7226 கனஅடியாக நீர் வரத்து சரிந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 15,000 கனஅடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக விநாடிக்கு 800 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணைக்கு நீர்வரத்தை காட்டிலும், பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 91.73 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 91.08 அடியானது. நீர் இருப்பு 53.89 டிஎம்சியாக உள்ளது.
The post மேட்டூர் நீர்மட்டம் 91.08 அடி appeared first on Dinakaran.