வறுமை ஒழிப்பு, தரமான கல்வி உள்ளிட்ட 13 வகையான துறைகளில் தமிழகம் தான் முதல் மாநிலம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: வறுமை ஒழிப்பு, மகளிர் முன்னேற்றம், தரமான கல்வி உள்ளிட்ட 13 வகையான துறைகளில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது என்று பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதமாக கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், பொதுமக்களுக்கு மாபெரும் பட்டா வழங்கும் நிகழ்ச்சி, இந்து கல்லூரி வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பட்டா வழங்கி சிறப்பித்தார்.

நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 36,000 பட்டாக்கள் தயார் செய்யப்பட்டு இதுவரை நான் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று 20,000 பட்டாக்களை வழங்கினேன். வறுமை ஒழிப்பு, மகளிர் முன்னேற்றம், தரமான கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட 13 வகையான துறைகளில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதல் மாநிலமாக உள்ளது. இதை துணை முதலமைச்சரான நான் கூறவில்லை. ஒன்றிய அரசின் நிதி ஆயோக் என்ற அமைப்பு புள்ளி விவரத்துடன் கூறியுள்ளது. அதேபோல் இந்தியாவிலேயே அதிகளவில் வேலைக்குச் செல்லும் பெண்கள் 42 சதவீதம் பேர் தமிழகத்தில்தான் உள்ளனர். இதற்காக, இந்தியா மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. மக்களைத் தேடி நிர்வாகம் என்ற நோக்கத்தில்தான் இன்று அனைவருக்கும் வீட்டுமனை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

The post வறுமை ஒழிப்பு, தரமான கல்வி உள்ளிட்ட 13 வகையான துறைகளில் தமிழகம் தான் முதல் மாநிலம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: