இருபுறமும் அடர்ந்து படர்ந்து கிடக்கும் அலையாத்திகாடுகளின் இயற்கை அழகு மெய்மறக்க வைக்கும். உள்ளே சென்றதும் லகூன் பகுதியில் உள்ள குட்டிக்குட்டி தீவுகளின் அழகு பிரமிக்க வைக்கும். இதனால் இந்த காட்டின் அழகை ரசிக்க ஆண்டு முழுவதும் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் பல்வேறு பகுதியிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த அலையாத்திகாடு பகுதியில் அலையாத்தி தாவரம் கடற்கரை ஓரங்களில் உள்ள சேறு கலந்த சதுப்பு நிலங்களிலும், உவர்நீரிலும் வளரக்கூடியது. இந்நிலையில் கஜா புயலில் அழிந்த காடுகளை மீட்டெடுக்கும் விதமாக, காலியாக உள்ள நிலப்பரப்பில் தகுதியான இடங்களில் வனத்துறை மூலம் அலையாத்தி தாவரங்கள் நடப்பட்டு, அலையாத்திக்காடுகள் உருவாக்கப்படுகிறது.
அதன்படி ஏற்கனவே “தமிழ் வாழ்க” என்ற எழுத்து வடிவிலும், மீன் முள் வடிவத்திலும், கட்டம் கட்டமாக பாக்ஸ் வடிவிலும் கிளை வாய்க்கால்கள் அமைத்து வாய்க்கால்களின் ஓரத்தில் அலையாத்திச்செடிகள் நடவு செய்யப்பட்டு காடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இன்னும் 3 ஆண்டுகளில் இந்த அலையாத்தி செடிகள் வளர்ந்து தமிழ் வாழ்க என்ற எழுத்து வடிவிலும், மீன் முள் வடிவிலும் இருக்கும் போது சுற்றுலா பயணிகளுக்கு அது பெரும் விருந்தாக அமையும். தற்போது, பாக்ஸ் வடிவ காடுகள் பசுமையாக வளர்ந்து, கண்களுக்கு விருந்தளித்து வருகிறது.
The post முத்துப்பேட்டையில் கண்களுக்கு விருந்தளிக்கும் பாக்ஸ் வடிவ அலையாத்தி காடு appeared first on Dinakaran.