காரைக்கால் ஜிப்மர் மருத்துவ கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

காரைக்கால்: காரைக்கால் கோவில்பத்து புறவழிசாலையில் ஜிப்மர் மருத்துவ கல்லூரி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக எஸ்எஸ்பி அலுவலகத்திற்கும், கல்லூரி அலுவலகத்துக்கும் இன்று காலை 11 மணியளவில் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. உடனே எஸ்எஸ்பி மணிஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் கல்லூரி வளாகம், வகுப்பறைகள், மாணவ- மாணவிகள் தங்கும் விடுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் அங்குலம் அங்குலமாக தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

மருத்துவமனையையொட்டிய சாலைகள் அடைக்கப்பட்டது. இங்கிருந்த பொது மக்கள் வெளியேற்றப்பட்டனர். புதுச்சேரி ஜிப்மருக்கு நேற்று வெடி குண்டு மிரட்டல் வந்த நிலையில் இன்று காரைக்கால் பகுதியில் உள்ள ஜிப்மருக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் பரம்பரப்பை ஏற்படுத்தியது. சோதனை முடிவில் வெடி குண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.

 

The post காரைக்கால் ஜிப்மர் மருத்துவ கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Related Stories: