சென்னை: சாம்சங் ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசரமாக முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு, தொழிற்சங்க அனுமதி உள்ளிட்ட 20 கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் ஊழியர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படுகிறது.