அண்ணாமலையை கிண்டலடித்த விவகாரம் செல்லூர் ராஜூ செல்லும் இடமெல்லாம் போராட்டம்: மதுரை பாஜ மாவட்ட தலைவர் அறிவிப்பு

மதுரை: மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ செல்லும் இடமெல்லாம் போராட்டம் நடத்தப்படும் என பாஜ மதுரை மாவட்ட தலைவர் எச்சரித்துள்ளார். மதுரை மாநகர் மாவட்ட பாஜ தலைவர் மகா.சுசீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தெர்மாகோல் விஞ்ஞானி, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தொடர்ந்து தரம் தாழ்ந்து எங்களது மாநிலத் தலைவர் அண்ணாமலையை விமர்சித்து வருகிறார். அண்ணாமலையிடம், செல்லூர் ராஜூ மன்னிப்பு கேட்க வேண்டும்.

இல்லையென்றால், எந்தவொரு தனித் தகுதியும் இல்லாத நிலையில், ஜெயலலிதாவின் பாதம் பிடித்து அமைச்சர் பதவி பெற்று இன்று வரை, செல்லூர் ராஜூவாகிய நீ வகித்த பதவிகளில் பல கோடிகள் ஊழல் செய்து, தன்னை ஒரு அரசியல்வாதியாக அடையாளம் காட்டிக் கொள்ளும் உனக்கு, மிக விரைவில் பாஜ சார்பில், நீ செல்லும் இடம் எல்லாம் உனக்கு எதிராக பிரமாண்டமான ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் அறிவிக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார். கடந்த 6ம் தேதி நடந்த அதிமுக கூட்டத்தில் செல்லூர் ராஜூ, ‘‘ஆட்டுக்குட்டி லண்டன் போய்விட்டது’’ என்று அண்ணாமலையை கிண்டலடித்து பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

The post அண்ணாமலையை கிண்டலடித்த விவகாரம் செல்லூர் ராஜூ செல்லும் இடமெல்லாம் போராட்டம்: மதுரை பாஜ மாவட்ட தலைவர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: