முதல் ஓவரிலேயே மெய்டன் பிறகு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீச்சு என அவர் அசத்தியிருக்கிறார். காயத்திலிருந்து மீண்டு வந்திருப்பதால் அவரால் அதிவேகமாக பந்துவீசி இருக்க முடியாது. எனினும் 148, 150 என்பதும் அதிவேகம்தான். ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் மயங்க் யாதவுக்கு சூரியகுமார் யாதவ் முதல் ஓவரை வழங்கி இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், இன்னும் ஆட்டம் சிறப்பாக இருந்திருக்கும். பேட்ஸ்மேன் மனதில் பயத்தை உண்டாக்கும் வீரராக மயங்க் யாதவ் இருக்கிறார். அவர் பந்து வீசும் போது பேட்ஸ்மேன்கள் காலை முன்னால் எடுத்து விளையாட பயப்படுகிறார்கள். முழு உடல் தகுதியுடன் இருந்தால் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் மயங்க் யாதவை பயன்படுத்த வேண்டும்’’ என்றார்.
இதேபோன்று கம்ரான் அகமல் கூறுகையில், “மயங்க் பிரமிக்கத்தக்க அறிமுகத்தை பெற்று இருக்கிறார். இந்த தொடரில் அவர் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கும் வீரராக மாறிவிட்டார். இந்தியாவின் மருத்துவத்துறை சிறப்பாக இருப்பதால் ,அவர் காயத்திலிருந்து விரைவில் மீண்டு வந்துவிட்டார்’’ என்றார். இந்த நிலையில், இந்திய-வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நாளை (புதன்) டெல்லி பிரோசா கோட்லா மைதானத்தில் நடைபெறுகிறது.
The post ஆஸி. டெஸ்ட் தொடருக்கு அழைத்துச்செல்லுங்கள்; மயங்க் யாதவ் பிரமிக்கத்தக்க பந்துவீச்சாளர்: பாக். மாஜி வீரர்கள் பாராட்டு appeared first on Dinakaran.