சென்னை: விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த 5 பேர் உயிரிழந்தது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அண்ணாசதுக்கம் காவல்நிலையம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மெரினா காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 5 பேர் உயிரிழப்பு குறித்து இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.