கே.வி.குப்பம் : கே.வி.குப்பம் வாரச்சந்தையில், புரட்டாசி மாதம் எதிரொலியாக நேற்று ஆடுகள் வரத்து குறைந்து விற்பனையும் மந்தமாகவே இருந்தது.வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் பகுதியில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடக்கும் ஆட்டுச்சந்தை பிரபலமானது.
அதன்படி, திங்கட்கிழமையான நேற்று காலை வழக்கம்போல் ஆட்டுச்சந்தை தொடங்கியது. இதையொட்டி, குடியாத்தம், பரதராமி, காட்பாடி, அணைக்கட்டு, ஒடுகத்தூர், பேரணாம்பட்டு உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடக மாநில எல்லை பகுதிகளில் இருந்து குறைந்த அளவிலான ஆடுகள் மட்டுமே விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
ஆனால், வழக்கத்தைவிட நேற்று ஆடுகள் வரத்து குறைந்த அளவிலேயே இருந்தாலும், புரட்டாசி மாதம் என்பதாலும் எதிர்பார்த்ததைவிட கூடுதல் விலைக்கு ஆடுகளை விற்க முடியாததால் ஏமாற்றம் அடைந்து, சிலர் தங்களது திரும்ப கொண்டு சென்றனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘புரட்டாசி மாதம் என்பதால் கடந்த வாரத்தை போலவே இன்று (நேற்று) நடந்த சந்தையிலும் ஆடுகள் விற்பனை சுமாராக தான் இருந்தது. குறைந்த எண்ணிக்கை ஆடுகள் மட்டுமே விற்பனையானது. இதனால் பலர் கொண்டு வந்த ஆடுகளை திரும்ப கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது. பலர் ஆடுகளை விற்பனைக்காக கொண்டுவரவில்லை’ என கூறினர்.
The post கே.வி.குப்பம் வாரச்சந்தையில் ஆடுகள் வரத்து குறைந்து விற்பனை மந்தம் appeared first on Dinakaran.