இதன்பின் முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், எதிர்க்கட்சித் தலைவர் சதீசன், சபாநாயகர் ஷம்சீரை அவமரியாதையாக பேசியதின் மூலம் மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொண்டுள்ளார் என்று கூறினார். இதன்பின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் சபைக்கு திரும்பினர். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் முதல்வர் பினராயி விஜயனை விமர்சித்தார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரின் இருக்கையை மறைத்தபடி பேனர்களை ஏந்தியபடி கோஷமிட்டனர். சபை காவலர்கள் அங்கு விரைந்து சென்று எதிர்க்கட்சியிரை வெளியேற்றினர். இதை தொடர்ந்து கேரள சட்டசபை நேற்று நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
The post கேரள சட்டசபையில் அமளி ஆளும், எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் இடையே மோதல் appeared first on Dinakaran.