பெங்களூரு அருகே நெலமங்களா பகுதியில் கார் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழப்பு..!!

பெங்களூர்: பெங்களூரு அருகே நெலமங்களா பகுதியில் கார் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். வார விடுமுறை காரணமாக, தொழிலதிபர் ஒருவரின் குடும்பத்தினர், கேஏ-01-என்டி-1536 என்ற பதிவு எண் கொண்ட எஸ்யூவியில் ஊருக்கு வெளியே சென்று கொண்டிருந்தனர். அப்போது தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான டிரக் மீது மற்றொரு டிரக் மோதிய நிலையில் அதன் அருகில் சென்று கொண்டிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது கன்டெய்னர் லாரி திடீரென கவிழ்ந்ததில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். பெங்களூருவில் இருந்து துமகூரு நோக்கி சென்றுகொண்டிருந்தபோது கார் விபத்தில் சிக்கியது. தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக 3 கி.மீ. தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

The post பெங்களூரு அருகே நெலமங்களா பகுதியில் கார் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: