அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு சில தலைவர்கள் அதேபோன்ற விவகாரங்களை புதிய இடங்களில் பேசி வருகின்றனர். இதன்மூலம், இந்துக்களின் தலைவர்களாக வர அவர்கள் முயற்சிப்பது ஏற்புடையது அல்ல. இந்துக்களின் நம்பிக்கை என்பதால் ராமர் கோயில் கட்டப்பட்டது. தற்போது இது போன்ற பிரச்னைகளை அன்றாடம் எழுப்புவதை எப்படி அனுமதிப்பது? இந்த நிலையை தொடர முடியாது.
நாம் அனைவரும் இங்கு ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை இந்தியா காட்ட வேண்டியுள்ளது. சிலர் பழங்கால நிலை மீண்டும் வரவிரும்புகின்றனர். நம் நாடு தன் அரசியலமைப்பு சட்டத்தின்படி நடைபெறுகிறது. நாம் அனைவருமே இந்தியர்கள் எனக் கருதும் போது ’மொழிகளின் ஆதிக்கம் ஏன்? சட்டத்தின் முன்பாக யாரும் மெஜாரிட்டி, மைனாரிட்டி என்றில்லை. நம் நாட்டில் ஒவ்வொருவரும் அவரவர் மதநம்பிக்கைகளை பின்பற்றுவது நமது கலாச்சாரம். மதநல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்றார்.
The post அயோத்தியோடு முடிந்து விட்டது கோயில் – மசூதி விவகாரங்களுக்கு இந்தியாவில் இனி இடமில்லை: இந்துத்துவா தலைவர்களுக்கு மோகன் பகவத் கண்டிப்பு appeared first on Dinakaran.