இந்நிலையில் ஏற்கனவே வீட்டுக்கு உண்டான டைல்ஸ் வந்து இறங்கிய நிலையில், நேற்று முன்தினம் மாலை துளசி வீட்டுக்கு வந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மின்சார உபகரணங்கள் பார்சலில் வந்துள்ளதாக கூறி, அந்த பார்சலை துளசியிடம் ஒப்படைத்து விட்டு சென்றார். இந்நிலையில் நேற்று காலை துளசி பார்சலை திறந்த பார்த்தபோது அதில், அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்தது.
பார்சலில் இருந்து கடிதத்தில், ரூ.1.30 கோடியை தர வேண்டும். இல்லையென்றால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று மிரட்டல் விடுவிக்கப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த துளசி இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதனடிப்படையில், எஸ்.பி. நயீம் ஆஸ்மி தலைமையிலான போலீசார் அங்கு வந்து சடலத்தை மீட்டனர். மேலும் பார்சல் அனுப்பியது யார் என்பது குறித்து ஆய்வு செய்து, இறந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஆந்திராவில் பயங்கரம் வீட்டுக்கு வந்த பார்சலில் அழுகிய ஆண் சடலம்: ரூ.1.30 கோடி கேட்டு மிரட்டல் கடிதம் இருந்ததால் அதிர்ச்சி appeared first on Dinakaran.