போலீசாரும் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வந்தநிலையில், பெண்ணின் உறவினர்கள் கடந்த 2 நாட்களாக சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாயமான மாணவி தனது காதலனான சூனாம்பேடு பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் டேனியல் (24) என்பவருடன் பாபநாசம் காவல் நிலையத்தில் திருமண கோலத்தில் தஞ்சம் அடைந்திருப்பதாக சூனாம்பேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனிடையே, இந்த வழக்கு மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
இதனையடுத்து, பாபநாசம் சென்ற போலீசார் இருவரையும் மீட்டு மேல்மருவத்தூர் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இருவரும் கடந்த பல மாதங்களாக காதலித்து வந்ததும், திருமணம் செய்து கொண்ட இவர்கள் இரு வீட்டாருக்கும் பயந்து பாபநாசம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் இரண்டு தரப்பினரையும் காவல் நிலையம் வரவழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
The post சூனாம்பேடு அருகே காணாமல்போன கல்லூரி மாணவி காதலனுடன் மீட்பு appeared first on Dinakaran.