இருவரும் 2வது விக்கெட்டுக்கு 253 ரன் சேர்த்து அசத்தினர். அப்துலா 102 ரன் (184 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்), ஷான் 151 ரன் (177 பந்து, 13 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். பாபர் ஆஸம் 30 ரன்னில் வெளியேறினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 328 ரன் குவித்துள்ளது (86 ஓவர்). சவுத் ஷகீல் (35 ரன்), நசீம் ஷா (0) களத்தில் உள்ளனர். இங்கிலாந்து பந்துவீச்சில் கஸ் அட்கின்சன் 2, கிறிஸ் வோக்ஸ், ஜாக் லீச் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.
The post இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் பாகிஸ்தான் 328/4: ஷான் 151, அப்துல்லா 102 appeared first on Dinakaran.