சென்னை: சாம்சங் நிறுவன தொழிலாளர்களுடன் அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து அக்டோபர் மாதம் முதல் 2025 மார்ச் வரை ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கவும் பணியின்போது உயிரிழந்தால் சம்பந்தப்பட்ட ஊழியரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கவும் உடன்பாடு ஏற்பட்டது.