தண்டராம்பட்டு : விடுமுறையை முன்னிட்டு சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் திரண்டு பூங்காக்களை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குவது சாத்தனூர் அணையாகும் பொன்விழா கண்டஇந்த அணை 119 அடி உயரம் கொண்டது.விவசாய பாசனத்திற்காக தொடர்ந்து 100 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் சாத்தனூர் அணை என்பது அடியாக நீர்மட்டம் குறைந்தது.
கே ஆர் எஸ் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால் சாத்தனூர் அணை சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாத்தனூர் அணைக்கு 250 கன அடி தண்ணீர் வினாடிக்கு வந்து கொண்டு இருக்கிறது.இதனால் நேற்று மாலை சாத்தனூர் அணை 94.75அடியாக நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.
பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டதால் சாத்தனூர் அணையை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் வந்து ஆதாம் ஏவாள் பூங்கா, டைனோசர் பார்க் தொங்கு பாலம் செயற்கை நீரூற்று, தாஜ்மஹால் பார்க், நீச்சல் குளம், முதலைப் பண்ணை, கலர் மீன் கண்காட்சி, காந்தி மண்டபம் உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.
The post விடுமுறையை முன்னிட்டு சாத்தனூர் அணையில் திரண்ட சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.