காரங்காடு ஆலயத்தில் மாணவர்கள் வடிவமைத்த ஜெபமாலை கண்காட்சி

 

திங்கள்சந்தை, அக். 7: காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலயத்தில் மாணவர்கள் கோர்த்து வடிவமைத்த ஜெபமாலை கண்காட்சி நடைபெற்றது. காரங்காடு புனித ஞானப்பிறகாசியார் ஆலயத்தில் ஜெபமாலை முத்துக்களை வைத்து ஜெபமாலை கோர்ப்பது குறித்த செய்முறை பயிற்சி நடைபெற்றது. மாணவர்கள் காலாண்டு விடுமுறையை பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நடந்த இந்த பயிற்சிக்கு பங்கு பணியாளர் சுஜின் தலைமை வகித்தார்.

அருட்சகோதரர் ஜீவா பயிற்சி அளித்தார். தொடர்ந்து ஸ்போக்கண் இங்கிலீஷ் பயிற்சியும் நடைபெற்றது. 8 நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சியில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இதனிடையே மாணவ மாணவிகள் கோர்த்து வடிவமைத்த அனைத்து ஜெபமாலைகளும் நேற்று காண்காட்சிக்கு வைக்கப்பட்டன. ஆலய வளாக அரங்கில் நடைபெற்ற ஜெபமாலை கண்காட்சியை 500க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர்.

The post காரங்காடு ஆலயத்தில் மாணவர்கள் வடிவமைத்த ஜெபமாலை கண்காட்சி appeared first on Dinakaran.

Related Stories: