பார்க்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த இலங்கையை சேர்ந்த நோயாளிக்கு வெற்றிகரமாக அறுவைசிகிச்சை: காவேரி மருத்துவமனை தகவல்

சென்னை: பார்க்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த இலங்கையை சேர்ந்த நோயாளிக்கு காவேரி மருத்துவமனை வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை செய்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பு: இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் பார்க்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். குறிப்பாக பேச்சு குளறியதோடு, பொருட்களை பிடிப்பதிலும் அவருக்கு சிரமம் இருந்தது. இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையை நாடினார்.

இவரை பரிசோதித்த நரம்பியல் நிபுணர்களின் குழு, பார்க்கின்சன்ஸ் நோய் பாதிப்புள்ளவர்களுக்கு மிக நவீன சிகிச்சையான ஆழ்ந்த மூளை தூண்டுதல் (DBS) அறுவை சிகிச்சையை மேற்கொள்ள பரிந்துரைத்தது. இதையடுத்து நரம்பியல் நிபுணரான வெங்கட்ராமன் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் இவருக்கு வெற்றிகரமான அறுவை சிகிச்சையை செய்து முடித்தனர். இதனை தொடர்ந்து இந்நோயாளி உட்கொண்டு வந்த மருந்துகளின் அளவு குறைக்கப்பட்டிருக்கிறது. அவரது பாதிப்பு அறிகுறிகளும் கணிசமான முன்னேற்றத்தைக் கண்டிருக்கின்றன.

 

The post பார்க்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த இலங்கையை சேர்ந்த நோயாளிக்கு வெற்றிகரமாக அறுவைசிகிச்சை: காவேரி மருத்துவமனை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: