உடலில் காயங்கள்… இடுப்பில் கத்தி சர்ச்சுக்கு வந்த வாலிபரால் பதற்றம்: திருவள்ளூர் அருகே பரபரப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள தேவாலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு முதல் சிறப்பு திருப்பலி, ஆராதனை நடைபெற்று வருகிறது. இதில் செவ்வாப்பேட்டை, திருவூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று பிரார்த்ததனை செய்தனர். நள்ளிரவு 12 மணி அளவில் உடல் முழுவதும் காயங்களுடன் வாலிபர் ஒருவர் தேவாலயத்திற்குள் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவரை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒருசிலர் அவரிடம் விசாரித்துள்ளனர்.

அப்போது அந்த நபர், ‘’வாகனத்தில் இருந்து தவறி விழுந்து விட்டதாகவும் இதனால் தேவாலயத்தில் பிரார்த்தனை செய்ய வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அவரை பிரார்த்தனை செய்ய அனுமதித்தனர். அப்போது அவரது இடுப்பில் பெரிய கத்தி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

The post உடலில் காயங்கள்… இடுப்பில் கத்தி சர்ச்சுக்கு வந்த வாலிபரால் பதற்றம்: திருவள்ளூர் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: