சொந்த மண்ணில் வங்கதேசத்துடன் நடந்த டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆனதால் பாகிஸ்தான் அணி கடும் நெருக்கடியுடன் களமிறங்குகிறது. அந்த அணி கடைசியாக விளையாடிய 5 டெஸ்டிலும் மண்ணைக் கவ்வியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் இங்கிலாந்து அணி கடைசியாக விளையாடிய 5 டெஸ்டில் 4 வெற்றி, 1 தோல்வியை பதிவு செய்துள்ளதால் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளது.
பாகிஸ்தான்: ஷான் மசூத் (கேப்டன்), சவுத் ஷகீல் (துணை கேப்டன்), ஆமிர் ஜமால், அப்துல்லா ஷபிக், அப்ரார் அகமது, சல்மான் ஆஹா, பாபர் ஆஸம், மிர் ஹம்சா, முகமது ரிஸ்வான், முகமது ஹுரைரா, நசீம் ஷா, நோமன் அலி, சைம் அயூப், சர்பராஸ் அகமது, ஷாகீன் ஷா அப்ரிடி.
இங்கிலாந்து: ஆலிவர் ஜான் போப் (கேப்டன்), கஸ் அட்கின்சன், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜார்டன் காக்ஸ், ஸாக் கிராவ்லி, பென் டக்கெட், ஜாக் லீச், மேத்யூ பாட்ஸ், ரெஹான் அகமது, ஜோ ரூட், சோயிப் பஷிர், ஜேமி ஸ்மித், ஆலிவர் ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ்.
The post பாகிஸ்தான் – இங்கிலாந்து முதல் டெஸ்ட் இன்று தொடக்கம் appeared first on Dinakaran.