சென்னை: இந்திய விமானப் படையின் 92 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்சாகசக் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. உலகத்திலேயே அதிக மக்கள் பங்கேற்ற ராணுவ நிகழ்ச்சி என்ற சாதனை விமான சாகசம் படைத்தது. சென்னையில் நடைபெறும் விமான சாகசத்தை நேரில் சுமார் 10 லட்சம் பேர் கண்டு களித்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.