×

2வது நாளாக மழை; விவசாயிகள் மகிழ்ச்சி

வேப்பனஹள்ளி, அக்.5: வேப்பனஹள்ளியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. போதிய மழை இல்லாததால் அவரை, துவரை மற்றும் கொள்ளு போன்ற மானாவாரி பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மாலையில் சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக, வாடிய பயிர்கள் மீண்டும் துளிர்த்து விளைச்சல் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

The post 2வது நாளாக மழை; விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Veppanahalli ,Duwari ,Dinakaran ,
× RELATED இளம்பெண்கள் மாயம்