ஆகவே, நம்மிடம் உற்சாகம் இருக்கலாம். ஆனால், படையணியினர் ஓரிடத்தில் கூடினால், அந்த இடம் கட்டுப்பாடு மிக்கதாக மட்டுமில்லாமல் பக்குவம் நிறைந்ததாகவும் இருக்கும் என்பதையும் நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும். இவர்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா? மாநாடு என்றால் என்னவென்று தெரியுமா?
இப்படி ஏகப்பட்ட கேள்விகளை நம் மீது வீசுவதில் அதீத விருப்பம் கொண்டவர்களாகச் சிலர் இருக்கின்றனர். இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டும்போதுதான் அவர்களுக்குப் புரியும். இவ்வாறு விஜய் கூறியுள்ளார். முன்னதாக மாநாட்டிற்கான துவக்க விழாவாக பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று அதிகாலை 5 மணியளவில் விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்றது.
The post ராணுவக் கட்டுப்பாடுடன் இயங்க வேண்டும்: கட்சியினருக்கு விஜய் வேண்டுகோள் appeared first on Dinakaran.