ஈரான்-இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் எதிரொலி கச்சா எண்ணெய் விலை உயருகிறது: ஒரேநாளில் பீப்பாய் 2 டாலர் அதிகரிப்பு

சேலம்: உலக நாடுகளுக்கு தேவையான பெட்ரோலிய பொருட்களுக்கான கச்சா எண்ணெய்யை ஈரான், ஈராக் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும், உக்ரைன், ரஷ்யா போன்ற நாடுகளும் வழங்கி வருகின்றன. ரஷ்யா-உக்ரைன் போர் ஏற்பட்டவுடன் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 130 டாலர் வரை அதிகரித்தது. தற்போது ஈரான்-இஸ்ரேல் இடையே போர் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. இரு நாடுகளும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன்காரணமாக ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி, வரும் நாட்களில் பெருமளவு சரியும் என்பதால், சர்வதேச சந்தையில் நேற்று முதல் கச்சா எண்ணெய் விலை வேகமாக உயரத் தொடங்கி விட்டது. நேற்று மட்டும் பிராண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 2 டாலருக்கு மேல் அதிகரித்தது. நேற்று காலை ஒரு பீப்பாய் 73 டாலர் என்றிருந்தது, மாலையில் 75.340 டாலராக அதிகரித்துள்ளது. இதனால், அடுத்தடுத்து வரும் மாதங்களில் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை அதிகரிக்கும் சூழல்தான் ஏற்படும் என்று ஆயில் நிறுவன பங்கு வர்த்தகத்தினர் தெரிவித்துள்ளனர்.

The post ஈரான்-இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் எதிரொலி கச்சா எண்ணெய் விலை உயருகிறது: ஒரேநாளில் பீப்பாய் 2 டாலர் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: